காதலியை கழுத்தறுத்து கொலை செய்து காதலன் தூக்கிட்டு தற்கொலை!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் எல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (30). இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளியில் சத்துணவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

இந்த காலகட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஃபிக் என்பவருடன் ரஞ்சிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. ரஃபிக் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். குழந்தையை விட்டு வரச் சொன்னதால் ரஞ்சிதா காதலை முற்றிலும் மறுத்து பேசுவதை நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஃபிக், கடந்த ஜனவரி 2ம் தேதி வேலை முடிந்து வந்த ரஞ்சிதாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவான ரஃபிக், காட்டில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த இரட்டை மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
