பெற்றோர்களே உஷார்.... சிறுவன் டிராக்டர் ஓட்டிய வீடியோ வைரல்… ஆபத்து!
இந்தியச் சட்டப்படி 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். இதுபோன்ற செயல்கள் ஓட்டுநருக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்நிலையில், சிறுவன் ஒருவர் வயலில் டிராக்டரை இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 26 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சிறுவன் எந்த அச்சமும் இல்லாமல் டிராக்டரை ஓட்டி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான். அவன் வாகனத்தை கையாளும் விதம் அனுபவம் வாய்ந்த ஓட்டுநரைப் போல இருப்பதாக பலர் கூறுகின்றனர். ஆனால் சிறுவனின் வயதுக்கும் டிராக்டரின் எடை, வேகம் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள முரண்பாடு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் பெற்றோர்களின் அலட்சியத்தை விமர்சித்து வருகின்றனர். சிறுவர்களை இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்துவது உயிருக்கு ஆபத்தாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சட்ட விதிகளை கடைபிடிப்பதே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என வலியுறுத்தப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
