#BREAKING: நடிகர் மன்சூர் அலிகான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்!

 
பிரபல நடிகையின் சொத்து அபகரிப்பு!! மன்சூர் அலிகான் மீது வழக்கு!!

தமிழ்த் திரைப்பட நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான், தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவர்களின் பெயர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.

திடீர் என்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

வடமாநிலத்தவர் பெயர்கள்: தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன என்று மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு பெயர்களைச் சேர்ப்பது, எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக அமைப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை மையமாக வைத்து, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்: நடிகர் மன்சூர் அலிகான் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்

மாநில அரசின் அனுமதியின்றி தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசைக் கண்டித்து, நாளை காலை 8  மணி முதல், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்னம் ஸ்டேடியம் முன்பு நடிகர் மன்சூர் அலிகான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். வடமாநிலத்தவர் வருகை மற்றும் அவர்களின் அரசியல் பங்களிப்பு குறித்து விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், மன்சூர் அலிகானின் இந்தத் தீவிரப் போராட்டம் குறித்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!