#BREAKING: பெங்களூரு ஏடிஎம் வேன் கொள்ளை... 3 பேர் கைது.. ரூ. 5.76 கோடி மீட்கப்பட்டது!

 
ஏடிஎம் கொள்ளை

பெங்களூருவின் மையப் பகுதியில் பட்டப்பகலில் ஏடிஎம் பணம் நிரப்பும் வேனில் இருந்து ரூ. 7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த 60 மணி நேரத்திற்குள்ளாகவே மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ. 5.76 கோடியும், கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மதியம் 12.48 மணியளவில் பெங்களூருவின் ஜே.பி.நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு, ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, அசோகா பில்லர் - ஜெயநகர் டெய்ரி சர்க்கிள் அருகே, வேனைப் பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த ஒரு கும்பல், வேனை மறித்துள்ளது. அந்தக் கார் ரிசர்வ் வங்கியின் இலச்சினையுடன் (Logo) காணப்பட்டதால், அதில் இருந்தவர்கள் தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறினர்.

வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரை மிரட்டிய கொள்ளையர்கள், "விதிமீறல் நடைபெற்றுள்ளது, ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்" என்று கூறி வேனைத் திறந்துள்ளனர்.

ஆவணங்களைச் சரிபார்ப்பது போல் நடித்த கொள்ளையர்கள், வேனில் இருந்த மொத்தப் பணமான ரூ. 7.11 கோடியையும் தங்களது காரில் மாற்றிக் கொண்டனர். கொள்ளைக்குப் பிறகு, வேனின் ஓட்டுநர் மற்றும் காவலரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற அவர்கள், மதியம் 1.16 மணியளவில் டெய்ரி சர்க்கிள் பகுதியில் காரை நிறுத்தி, ஓட்டுநர் மற்றும் காவலரை இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெங்களூரு மையப் பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சித்தாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொள்ளையர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்யக் காவல் துறையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள், கார் சென்ற வழித்தடங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கொள்ளைச் சம்பவம் நடந்து சுமார் 60 மணி நேரத்துக்குள்ளாகவே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 7.11 கோடியில் இருந்து ரூ. 5.76 கோடி மீட்கப்பட்டுள்ளது. கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில், பணம் நிரப்பும் பணியில் வேலை பார்த்த அனுபவமிக்கவர்களின் தகவல் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும், மேலும் 6 முதல் 8 பேர் வரை தொடர்பு இருக்கலாம் எனவும் காவல்துறை கூறியுள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!