#BREAKING: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்... தீவிரச் சோதனையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர்!

 
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா

மதுரை மாநகர் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய ரத வீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தற்போது தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்

இதே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு இன்று (டிசம்பர் 10) ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகத் தலைமைச் செயலாளர் உட்பட அதிகாரிகள் வரும் 17-ஆம் தேதி காணொலியில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!