BREAKING: கரையைக் கடக்க தொடங்கியது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்... மழை நீடிக்கும்!

 
புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது கரையை நோக்கி நகர்ந்து வந்து, கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல்

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இதுகுறித்துத் தெரிவித்துள்ளதாவது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்தத் தாழ்வு மண்டலம் முற்றிலுமாக கரையைக் கடந்துவிடும் என்று அவர் கணித்துள்ளார். இது சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைக் கடந்து செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை கனமழை

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இணையாக, வானிலை ஆய்வு மையமும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கான மழை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 22 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது: பொதுமக்கள் வானிலை நிலவரத்தைக் கவனித்து, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!