#BREAKING: அமைச்சர் செந்தில்பாலாஜி நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஏற்கனவே அங்கு சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
இது தவிர ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் மணி என்பவரின் வீட்டிலும், கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி என்பவரின் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!