BREAKING: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் !!

 
df

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு  வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்படுவதாகவும் இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஓ.பி.எஸ்

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என முடிவுகளை எடுத்தோம். செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுகிறார் என அறிவித்தார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார். இதனால் அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவியது.

ஓ.பி.எஸ்

பின்னர் அண்ணாமலை இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தேர்தலில் இருந்து பன்னீர்செல்லவம் தரப்பு விலகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும

From around the web