#BREAKING: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து... பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
சென்னை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் கடற்கரை ரயில் நிலையத்தில், இன்று மாலை நிகழ்ந்த தீ விபத்தால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. வழக்கம் போல இன்றும் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்களுக்காகக் கடற்கரை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது 3வது மற்றும் 4-வது நடைமேடையில் அமைந்துள்ள ஒரு கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, தீ பற்றி எரியத் தொடங்கியது. தீயைக் கண்ட பயணிகள் அச்சமடைந்து நடைமேடையை விட்டு வெளியேறத் தொடங்கினர். ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, ரயில்களுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும். மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
