#BREAKING : டெல்லி, மும்பை பிபிசி அலுவலகங்களில் வருவமான வரித்துறையினர் திடீர் சோதனை!

 
பிபிசி

பிரதமர் மோடியின் ஆவணப்படம் தொடர்பாக பிபிசி சர்ச்சையில் சிக்கிய நிலையில், இன்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


அலுவலகங்களில் இருந்த ஊழியர்களிடம் இருந்து செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு, உலகளவில் செய்திகளை உண்மையாகவும், துல்லியமாகவும் வழங்கி வரும் செய்தி நிறுவனமாக பிபிசி நிறுவனம் உள்லது. இந்தி, தமிழ், மராத்தி, சீனா, ஜப்பான் என உ லகம் முழுவதுமே பல மொழிகளில் பிபிசி நிறுவனம் தனது சேவையைத் தொடர்ந்து வருகிறது.

பிபிசி மோடி

இந்நிலையில், பிரதமர் மோடியைத் தொடர்புபடுத்தி, குஜராத் கலவரம்  குறித்து பிபிசி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது. 

இந்நிலையில், டெல்லி கே.ஜி. மார்க் பகுதியில் உள்ள பிபிசி அலுவலகம் மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஆய்வு நடைப்பெற்று வருவதால், அலுவலகத்திற்குள் வெளியில் இருந்து வந்த ஊழியர்கள்  யாரையும் அனுமதிக்கவும் இல்லை. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?