#BREAKING: பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் - பீகார் வெற்றிக்குப் பரிசு!
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செயல் தலைவராகப் பீகார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பீகாரில் கட்சி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய இவருக்கு, பாஜகவின் தலைமை இந்த மிக முக்கியமான பொறுப்பை வழங்கியுள்ளது.
பாஜகவின் தேசிய செயல் தலைவராகப் பணியாற்றி வந்த ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, புதிய செயல் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபினைப் புதிய தேசிய செயல் தலைவராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

நிதின் நபின் தற்போது பீகாரில் நிதிஷ் தலைமையிலான கூட்டணி அரசில் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். மேலும், இவர் பாஜகவின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். பீகார் மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு இவரது உழைப்பு மிக முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்பட்டது. இதன் காரணமாகவே, கட்சித் தலைமை இவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்துள்ளது.

பாட்னாவில் பிறந்த நிதின் நபின் (45), பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன் ஆவார். தந்தையின் மறைவுக்குப் பிறகு நேரடி அரசியலில் களமிறங்கிய இவர்: பனிகாபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் இளைஞர் பிரிவான பி.ஜே.ஒய்.எம். (BJYM) செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் பீகார் பாஜகவில் மிக முக்கிய முகமாக உள்ளதுடன், நடிகர் சத்ருகன் சின்காவைத் தோற்கடித்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
