BREAKING: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. கலெக்டர் உத்தரவு!
வலுவிழந்த 'டிட்வா' புயல் காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 3, 2025) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் மட்டும் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த அதீத மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, மீஞ்சூர் பேரூராட்சியின் கலைஞர் நகர், ராஜேஸ்வரி நகர் குடியிருப்புப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் முழுவதுமாகச் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகளின் வாசல் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மாணவர்கள் சிரமமின்றிப் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை மற்றும் தொடர்ந்து கனமழைக்கான எச்சரிக்கை நிலவுவதால், மாவட்ட நிர்வாகம் இந்தப் பள்ளி விடுமுறை முடிவை எடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
