#BREAKING: திருப்பூரில் பரபரப்பு... பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது!

 
அண்ணாமலை கைது

திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்னையைச் சீராகக் கையாளவில்லை என்றும், இதில் மெத்தனமாகச் செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் பாஜக சார்பில் திருப்பூரில் இன்று மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை முன்பாகத் திரண்ட பாஜகவினர், மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையிலும், திட்டமிட்டபடி பாஜகவினர் அங்குத் திரண்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. முன்னெச்சரிக்கையாகப் போராட்டத்திற்காகக் கொண்டுவரப்பட்ட வாகனத்தைப் போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அண்ணாமலை

தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது அவர், "திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை முறையாக மறுசுழற்சி செய்வதில்லை. குப்பைகளை மலைபோலச் சேர்த்தால் தான் அதில் அதிக ஊழல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள். ஒருபுறம் நகரம் வளர்ந்துவிட்டதாகக் கூறிவிட்டு, மறுபுறம் ஊரை குப்பை மேடாக மாற்றி வைத்துள்ளனர்" என்று மிகக் காட்டமாகச் சாடினார். ஜனநாயக முறையில் போராட அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்ட பின்னரும், காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக அனுமதி மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அண்ணாமலை

இதற்கிடையே, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை மற்றும் 500-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களைப் போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. "அமைதியான முறையில் போராடுபவர்களை எதற்காகக் கைது செய்கிறீர்கள்?" என்று அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் நிலவும் இந்த அரசியல் மோதல் காரணமாக மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!