அச்சச்சோ... தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத் திணறலால் பலி.. மூத்த மகனுடன் தாய் தற்கொலை!

 
லிஜி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே பூப்பாறை பகுதியை சேர்ந்தவர் லிஜி (38). அவரது மகன் பென் டோம் (7). இதனிடையே லிஜிக்கு கடந்த 28 நாளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய லிஜி, காலையில் தனது வீட்டில் வைத்து வழக்கம்போல்ல குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக லிஜி பெரும் வேதனையில் மூழ்கினார்.

லிஜி

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் லிஜியின் ஒரு குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது. அடுத்தடுத்து தனது 2 குழந்தைகளும் இறந்தது லிஜிக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் அருகில் உள்ள சர்ச்சுக்கு பிரார்த்தனைக்காக சென்றனர். 

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது லிஜியையும், அவரது மகன் பென் டோமையும் காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் அந்த பகுதியில் தேடிபார்த்தனர். அப்போது 2 பேரும் உடல்களும் வீட்டுக் கிணற்றில் கிடப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 பேரது உடல்களையும் மீட்டனர். 

லிஜி

குழந்தை இறந்த சோகத்தில் மகனை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு லிஜியும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பூப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web