ஜூலை 6,7 தேதிகளில் பிரேசிலில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு!

இந்த கூட்டமைப்பானது, கடந்த 2019ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நிறுவப்பட்டது. 2010ல் தென் ஆப்பிரிக்கா இணைந்தது. கடந்த ஆண்டில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் அதன் பின்னர் கடந்த ஜனவரியில் இந்தோனேசியாவும் 'பிரிக்ஸ்'ல் இணைந்தன. துருக்கி, அஜா்பைஜான், மலேசியா ஆகிய நாடுகள், கூட்டமைப்பில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளன.
11 உறுப்பு நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட 'பிரிக்ஸ்' கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் பிரேசில் தலைமை வகிக்கிறது. ரியோ டி ஜெனீரோ நகரில் வரும் ஜூலை 6, 7ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ள பிரேசில் அரசு, உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
'பிரேசிலின் தலைமையின்கீழ், உலளாவிய நிா்வாகம், சீா்திருத்தம், தெற்குலக நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். எதிா்வரும் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு ரீதியில் முக்கிய முடிவுகள் எட்டப்படும்' என்று பிரேசில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலரை சாராத மாற்று பரிவா்த்தனை அமைப்புமுறையை நிறுவ பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளன. அதேநேரம், அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!