திருமணமான மூன்றே நாளில் விவாகரத்து கேட்ட புதுமணப்பெண்... காரணம் கேட்டு அதிர்ந்த தந்தை!

 
திருமணம்

இளம்பெண் ஒருவர், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் ஊர்கூடி திருமணமான சந்தோஷத்தில், மணமகனின் வீட்டிற்கு சென்ற பொழுது, முதலிரவில் பெண்ணுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, தாம்பத்ய உறவைத் தவிர்த்த மணமகன், தாம்பத்ய உறவுக்கு உடல் தகுதியில்லை என்பதை அடுத்தடுத்து வந்த 2வது நாளில் தெரிந்து இடிந்து போனார் புதுமணப்பெண்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தில், திருமணமான மூன்றே நாளில் மணப்பெண் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். தன்னுடைய கணவருக்கு ஆண்மைத் தன்மை இல்லை என்று கோரக்பூரில் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

திருமணம்

சஹ்ஜன்வா பகுதியைச் சேர்ந்த வசதியான விவசாயி ஒருவரின் மகன், தன்னுடைய உடல் நல பிரச்சனை தெரிந்தும், இளம்பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு அந்த பெண்ணின் வாழ்க்கையையும் நாசம் செய்துள்ளார். அந்த இளைஞர் கோரக்பூரில் உள்ள ஒரு துறையில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். குடும்பத்தினர் அவருக்கு மிகத் தீவிரமாகப் பெண் தேடி வந்தனர். பெலியாபர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து வைத்தனர். நவம்பர் 28ம் தேதி மணமகள் வீட்டில் திருமணம் மிக விமரிசையாக நடந்தது. 29ம் தேதி மணமகள் கணவர் வீட்டிற்குச் சென்றார்.

டிசம்பர் 1-ம் தேதி மணப்பெண்ணின் தந்தை மகளைக் காண மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தார். அப்போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மாப்பிள்ளை திருமண உறவுக்குத் தகுதியற்றவர் என்பதை மணமகள் தன் தந்தையிடம் தனியாக பேசுகையில் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லாமல் தன் மகளை அங்கிருந்து அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பிறகு இரு குடும்பங்களும் ஒரு பொது உறவினர் வீட்டில் சந்தித்துப் பேசினர்.

போலீஸ்

அப்போது மாப்பிள்ளை குடும்பம் உண்மையை மறைத்ததாகக் குற்றம் சாட்டினர். மேலும், இது மாப்பிள்ளைக்கு இரண்டாவது திருமணம் என்றும் தெரிய வந்தது. முதல் மனைவி இதே காரணத்தைச் சொல்லி ஒரு மாதத்தில் பிரிந்து சென்றதாகவும் கூறினர். பிறகு தனியார் மருத்துவமனையில் மாப்பிள்ளைக்குப் பரிசோதனை நடந்தது. அவர் ஆண்மை இல்லாதவர் என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, சமரசம் ஏற்பட்டது. திருமணச் செலவுக்காகச் செலவழித்த ரூ. 7 லட்சம் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை மணமகள் குடும்பத்தினர் திரும்பத் தர ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். இதன் மூலம் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!