திருமணமான 12 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை... வேலை கிடைக்காத ஏக்கத்தில் பெண் மருத்துவர் செய்த முட்டாள்தனம்!
எம்.பி.பி.எஸ் முடித்து விட்டுப் பெரிய கனவுகளுடன் இருந்த ஒரு இளம் மருத்துவர், வேலைக் கிடைக்காத மன உளைச்சல் காரணமாக, திருமணமான 12 நாளிலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது உறவினர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா (25). இவர் எம்.பி.பி.எஸ்முடித்த பெண் மருத்துவர். ஜீவிதாவும், கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக் (28) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெற்றோரின் சம்மதம் கிடைக்காததால், கடந்த ஜனவரி 11ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையைத் தொடங்கி உள்ளனர். இது குறித்து ஜீவிதா தனது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு முடித்திருந்தும், தனக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை என்பது ஜீவிதாவுக்குப் பெரும் கவலையாக இருந்துள்ளது. இது குறித்து அவர் தனது தோழிகள் மற்றும் பெற்றோரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டுள்ளார். வேலை தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் அவரைத் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
