திருமணமான 2 வாரத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை... வரதட்சணைக் கொடுமையால் வாழ்க்கையில் விரக்தி!ரு
லக்னோ மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், சட்டங்கள் பல இருந்தாலும் இன்னும் வேரூன்றி இருக்கும் வரதட்சணை என்னும் சமூக அவலத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஜந்தம்பூர் பகுதியைச் சேர்ந்த நேஹா (20) என்ற இளம்பெண்ணிற்கும், விவேக் (24) என்பவருக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவீட்டு பெற்றோர் நிச்சயித்த நிலையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, நேஹாவின் கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.

கணவர் விவேக் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர் நெருக்கடியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நேஹா, நேற்று மாலை தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நேஹாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் விவேக், மாமியார் மீனா உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நேஹாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (Dowry Prohibition Act) கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
