காதலுடன் ஓடிய மணமகள்… அதிர்ச்சியில் கணவர், மாமன் தற்கொலை!
கர்நாடக மாநிலம் தாவநகரே மாவட்டத்தை சேர்ந்த சரஸ்வதி, இரண்டு மாதங்களுக்கு முன் ஹரிஷ் என்பவரை திருமணம் செய்தார். கடந்த 23-ஆம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், சரஸ்வதி தனது காதலன் சிவகுமாருடன் சென்றது தெரியவந்தது. இதை அறிந்த ஹரிஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த சரஸ்வதியின் தாய்மாமன் ருத்ரேஷும் வேதனையால் தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் சரஸ்வதிக்கு திருமணத்திற்கு முன்பே காதல் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது சரஸ்வதி மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
