கத்திரிக்காய் விலை சரிவு… விவசாயிகள் கவலை!

 
கத்திரிக்காய்

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில் கத்திரிக்காய் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 40 கிலோ மூட்டை கத்திரிக்காய் ரூ.3000 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது அதே மூட்டை ரூ.300க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டில் கத்திரிக்காய் விளைச்சல் அதிகமாக கிடைத்துள்ளது. ஆனால் சந்தையில் தேவைக்கு மேல் காய்கறி வருவதால் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் செலவுக்கு கூட பணம் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

விதை, உரம், தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் அதிகமாகியுள்ளது. விலை வீழ்ச்சியால் கடன் சுமையும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நியாயமான விலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!