திடீர் தொழில்நுட்பக் கோளாறு... லண்டனில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!
சமீபத்தில் குஜராத் மாநில அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி 270 பேர் பலியாகினர். இந்த கோர சம்பவத்தை அடுத்து அனைத்து விமானங்களும், முழுமையான பரிசோதனைக்கு பின்னரே இயக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு இருந்தாலும், அதை சரி செய்த பின்பே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சில மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானங்கள் புறப்படுவது, அல்லது ரத்து செய்யப்படுவது போன்றவை நடக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இதனால் ஏற்படும் சிரமங்களை பயணிகள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லண்டன் - சென்னை இடையே இருமார்க்கத்திலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில், லண்டன் பயணிகள் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும், பயணிப்பார்கள். ஆகையால் எப்போதும் இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அந்தவகையில் நேற்று லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திடீரென இயந்திரத்தில் FLAP ADJUSTMENT FAILURE கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு சிறிது நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டே நடுவானில் எரிபொருளை வெளியேற்றிவிட்டு, மீண்டும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கிவிட்டார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னைக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், சென்னையில் இருந்து லண்டனுக்கு இன்று அதிகாலை 5.35 மணிக்கு, புறப்பட்டு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இருமார்க்கமாகவும் பயணம் மேற்கொள்ள இருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
