பிறப்புறுப்பில் உடைந்த ஊசி.. மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

 
குழந்தை

புதுவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருடன் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக தெரிகிறது.

உடலில் சில சிக்கல்களுடன் அந்த குழந்தை பிறந்ததால் ஐசியூ பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதனிடையே டிசம்பர் 13ம் தேதி அந்த பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் உடைந்த ஊசி பதிந்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த பெண்ணிடமோ அவருடைய குடும்பத்தினரிடமோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை. 

குழந்தை

ஆனால் அறுவை சிகிச்சை மூலம் உடைந்த ஊசியை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றது. 3 மணி நேரம் நிகழ்ந்த அந்த அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தது. ஊசியின் உடைந்த பாகம் தனது உடலில் இருந்ததால் பெரும் அவதியை அந்த பெண் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் உடைந்த ஊசி பெண்ணின் பிறப்புறுப்பில் பதிந்திருப்பதை ஒப்புக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அந்த பகுதியில் ஏற்பட்ட அழற்சியின் காரணமாக அறுவை சிகிச்சையின் போது ஊசியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினர்.

பிறப்புறுப்புக்கு அதிக சேதம் ஏற்படாமல் தற்காலிகமாக ஊசியின் துண்டை அகற்றாமல் விட்டு விட்டு 3 மாதத்திற்கு பிறகு இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும் என மருத்துவக் குழுவினர் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு புரிய வைத்து விட்டு கையெழுத்தையும் பெற்றுக் கொண்டனர். மேலும் அந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவையும் அந்த மருத்துவமனை நிர்வாகமே ஏற்பதாகவும் உறுதி அளித்தது.

குழந்தை

புகாரின் பேரில் விசாரணை ஆணையம்,அந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் சிறிதும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கான தண்டனைக் காலமாக ரூ 2 லட்சமும் வழக்கு செலவுக்காக ரூ 25 ஆயிரமும் தனியார் மருத்துவமனை செலுத்த உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web