வாலிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கைது... மேலும் 3 பேருக்கு வலைவீச்சு!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் முன்விரோதத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.உடன்குடி தேரியூர் ஆண்டிவிளையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம் (27). திருமணம் ஆகவில்லை. இவரும், உடன்குடி செல்வபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். தினேஷ பந்தல் போடும் தொழிலாளி. இந்த 2பேரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடன்குடி கூழையன்குண்டு பகுதியில் மது குடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு உடன்குடி தேரியூர் ஆண்டிவிளையை சேர்ந்த ஆறுமுகம், முருகன், ராமர் ஆகியோர் வந்துள்ளனர்.
சிறிது நேரத்தில சுயம்புலிங்கம், தினேஷூவுடன் அந்த 3 பேரும் முன்விரோதத்தில் தகராறு செய்துள்ளனர். பின்னர் அந்த 3பேரும் அங்கிருந்து சென்று விட்டனராம். இந்நிலையில், கடந்த 20-ந் தேதி இரவில் தேரியூர் ஆண்டிவிளை கிரிக்கெட் மைதானம் அருகே இந்த இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ராமர், முருகன் மற்றும் நண்பர் மணி ஆகியோர் அவதூறாக பேசி சுயம்புலிங்கத்தை கீழே பிடித்து தள்ளி உள்ளனர்.
அப்போது ஆறுமுகம் கையில் வைத்திருந்த இரும்புக்கம்பியால் சுயம்புலிங்கத்தை தாக்கிஉள்ளார். தினேஷ் தப்பி ஓடிவிட்டாராம், மறுநாள் காலையில் சம்பவ இடத்திற்கு தினேஷூம், நண்பர் விக்னேஷூம் சென்று மயங்கிய கிடந்த சுயம்புலிங்கத்தை மீ்ட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காலையில் உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து 4 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான ஆண்டிவிளை குருசாமி மகன்கள் ராமர் (36), ஆறுமுகம் (32) ஆகிய 2 பேரை குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் (பொறுப்பு) கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!