சகோதரன் கைது... காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து சகோதரி உயிரிழப்பு!

 
கீர்த்திகா
தஞ்சை அருகே தனது சகோதரனை கைது செய்த போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு 2 சகோதரிகள் விஷம் குடித்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தஞ்சாவூர் அருகே வழக்கின் விசாரணைக்காக இளைஞர் ஒருவரை ஓர் நடுகாவிரி காவல் நிலையத்தி்ற்கு போலீசார் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரின் சகோதரிகள் கீர்த்திகா (29), மேனகா (31) காவல் நிலையத்திற்கு தனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை கண்டித்து சகோதரிகள் இருவரும் காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஷம்

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சகோதரி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி மேனகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web