சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை... தம்பி வெறித்தனம்!

 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி, தாயார் மற்றும் தம்பியின் மகனை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு காலனி தெருவைச் சேர்ந்தவர் சிவன் மகன் அந்தோணிராஜ் (50). இவர், கட்டடத் தொழிலாளியாகவும், டீக்கடை மற்றும் ஓட்டலுக்கு தேவையான டீகப் மற்றும் பிளாஸ்டிக் கவர் ஆகியவற்றை பைக்கில் சென்று விற்பனை செய்தும் வந்தார். இவருக்கு மனைவி இசக்கியம்மாள் மற்றும் 6 பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு மகன் சமீபத்தில் விபத்தில் ஒன்றில இறந்து போனார். 

பெண் போலீசார் காவலர்

அந்தோணிராஜிற்கும், அவரது தம்பி காசிவேல் என்பவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இதனால் இருவரும் நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இந்த பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்ததால் முன்விரோதமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தோணிராஜ் இடத்தில் அவரது 2வது மகனுக்க வீடு கட்ட இருந்ததாகவும், அதற்கான வேலைகள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அந்தோணிராஜிற்கும், காசிவேலுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணிஅளவில் அந்தோணிராஜ், வேலைக்கு முடித்து வீட்டிற்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த காசிவேல், அவரது மகன் பரத் மற்றும் காசிவேல் தாயார் அருள் அம்மாள் ஆகியோர் அவரிடம் சொத்து தொடர்பாக பிரச்னை காரணமாக தகராறில் ஈடுப்பட்டு அந்தோணிராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காசிவேல் உள்ளிட்ட 3பேர்களும் அந்தோணிராஜை சரமாரியாக கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். 

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

தாக்குதலில் காயம் அடைந்த அந்தோணிராஜை உறவினர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அந்தோணிராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல்அறிந்து சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், எட்வின் அருள்ராஜ் மற்றும் போலீசார், சம்பவஇடம் சென்று விசாரணை நடத்தினர். அந்தோணிராஜ் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே இந்த தாக்குதலில் காயமடைந்ததாக காசிவேல், அவரது தாயார் அருள் அம்மாள் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அந்தோணிராஜ் மகன் சிவா பீட்டர் அளித்த பகாரின் பேரில் போலீசார், காசிவேல், அவரது மகன் பரத் மற்றும் அருள் அம்மாள் ஆகியோர் மீது வழக்குபதிந்தனர். காசிவேலும், அருள் அம்மாளும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான பரத்தை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?