வாலிபரை கட்டையால் தாக்கிய அண்ணன், தம்பி கைது!
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வாலிபரை கட்டையால் தாக்கிய அண்ணன், தம்பி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மேல சண்முகபுரம், வண்ணார் 2வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கார்த்திக் குமார் (25). இவர் ஒரு பெண்ணிடம் பேசியதை வண்ணார் 3வது தெருவை சேர்ந்த சங்கர் மகன்கள் செல்வகுமார் (27), சேர்மகுமார் (25) ஆகிய 2 பேரும் கண்டித்துள்ளனர். இதனால் இவர்கள் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று அண்ணன் - தம்பி 2 பேரும் சேர்ந்து கார்த்திக் குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப் பதிந்து, செல்வகுமார் மற்றும் சேர்மகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
