"அண்ணே அடிக்காதீங்க.." கதறிய சிறுவனை காலால் எட்டி உதைத்து பீடி குடிக்கச் சொல்லி சித்ரவதை.. பகீர் வீடியோ!

 
சிறுவன் பீடி

விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் பகுதியில், சிறுவன் ஒருவனை சக சிறுவர்கள் வன்கொடுமை செய்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகத்தையே பதறவைத்துள்ளது. அங்குள்ள ஒரு தோட்டப் பகுதியில் வைத்து, இரண்டு சிறுவர்களை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. அவர்கள் அந்தச் சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி பீடி குடிக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். அதற்கு அந்தச் சிறுவர்கள் மறுப்புத் தெரிவித்து, "தலைவலிக்கிறது அண்ணே.. அடிக்காதீங்க" என்று அழுது கொண்டே கெஞ்சியுள்ளனர். ஆனால் சற்றும் இரக்கமில்லாத அந்த கும்பல், சிறுவர்களைக் காலால் எட்டி உதைத்து, தரதரவென இழுத்துச் சென்று சித்ரவதை செய்துள்ளனர்.


இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் ஒரு பகீர் காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய சிறுவர்கள் பீடி குடிப்பதை, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களது வீட்டில் போட்டுக் கொடுத்து விட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், "எங்களையே காட்டிக்கொடுக்கிறாயா?" என்று கேட்டு, பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாமல் சிறுவர்கள் அழுவதைப் பார்த்தும் விடாமல், அவர்களைக் கட்டாயப்படுத்தி பீடி குடிக்க வைத்து அதைத் தங்களது செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்

சிறுவர்களுக்குள் இவ்வளவு வன்மமா என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை காவல்துறையில் முறையான புகார்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் கிராமப்புறங்களில் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!