டீ குடிங்க... தூங்கிய போது எழுப்பியதால் அண்ணனை கோடரியால் வெட்டி கொலை செய்த தம்பி!
ஜான்சியில் குடும்பத்தகராறு கொலையில் முடிந்தது. டீ குடிக்க தூக்கத்தில் இருந்த இளைய சகோதரர் முசரிப் பேக்கை எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தின் உச்சத்தில் முசரிப் பேக், தனது மூத்த சகோதரர் தாரிக் பேக்கை கோடரியால் தாக்கி கொலை செய்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்குப் பிறகு உடலை வீட்டின் முற்றத்தில் 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். பின்னர் தனது சகோதரர் காணாமல் போனதாகவே போலீசில் புகார் அளித்து நாடகம் ஆடியுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகத்தின் பேரில் முசரிபிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
