ரூ.60 லட்சம் மோசடி புகாரில் அண்ணன், தங்கை கைது!

 
இளம் நடிகர் கைது
ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில், அண்ணன், தங்கையை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வீரப்பிள்ளை (44) இவருக்கு கடந்தாண்டு திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் சிவக்குமார் (49), இவரது தங்கையும், தஞ்சாவூர் அசோக் நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவருமான பரமேஸ்வரி (45) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

ரூ8,22,000/- மோசடி ! மிளகு கொள்முதல் செய்து ஏமாற்றிய ஜவுளிக்கடை உரிமையாளர் !

பின்னர் 3 பேரும் சேர்ந்து வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை தொழில் செய்யலாம் எனக் கூறி வீரப்பிள்ளையிடம் ரூ.59.90 லட்சத்தை சிவக் குமாரும், பரமேஸ்வரியும் வாங்கியுள்ளனர். ஆனால், தொழில் தொடங்காமல் காலம் தாழ்த்தியதுடன், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

 

இது குறித்து வீரப்பிள்ளை அளித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக் கழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிவக்குமார், பரமேஸ்வரி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?