மனைவி உறவினர்கள் அத்துமீறல்… கணவர் வீட்டில் கொடூர தாக்குதல்... பகீர் வீடியோ!

 
வீடியோ

திருமண உறவுகள் வன்முறையாக மாறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹரியானா மாநிலம் ரேவாரியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மனைவி தனது பிறந்த வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சுமார் 25-க்கும் மேற்பட்ட உறவினர்கள் ஒரே நேரத்தில் கணவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

அவர்கள் கணவர் மற்றும் அவரது முதிய பெற்றோரை தடிகளாலும் கூர்மையான ஆயுதங்களாலும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்த அலமாரிகளை உடைத்து நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறை நடந்தபோது அங்கிருந்த போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் ஆண்களின் பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தற்போது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல்துறையின் செயல்பாடு குறித்தும் உயரதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!