"வடமாநில இளைஞர் மீது குரூரத் தாக்குதல்: தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு!" - திருமாவளவன் வேதனை

 
திருமாவளவன்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரை நான்கு சிறார்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணியில் கஞ்சா போதையில் இருந்த நான்கு சிறார்கள், வடமாநில இளைஞரை வழிமறித்துக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். மேலும், இந்த கொடூரச் செயலை 'ரீல்ஸ்' (Reels) எடுப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பதிவேற்றியது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ரீல்ஸ்

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், "ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் வெளியிட்டுள்ள அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அநாகரிகமான மற்றும் கேவலமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். 

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், இத்தகைய குற்றச் செயல்களைத் தடுத்திடவும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே இத்தகைய வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது தமிழக அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!