இளம்பெண் மீது கொடூரத் தாக்குதல்... வைரல் வீடியோ... மம்தாவுக்கு அடுத்த அடி!
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பில் மாநில அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
No woman is safe in Mamata Banerjee's West Bengal !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) December 31, 2025
Disturbing visuals from Uttar Bhangnamari village at Basanti Block in the Canning Subdivision of South 24 Parganas district.
As per the complainant's accusation Jalil Laskar, Munna Laskar, Arif Laskar and others brutality… pic.twitter.com/mGdniGgYY7
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் சுவேந்து அதிகாரி கூறினார். ஒரு பெண்ணே முதல்வராக இருக்கும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மேற்கு வங்கம் வன்முறை பூமியாக மாறிவருகிறது என்றும், சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். இந்த சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கண்டனங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
