அஸ்ஸாமில் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் , வீடுகள்... ஒருவர் பலி, இணைய சேவை துண்டிப்பு!

 
வன்முறை

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக மாறியது. போடோ சமூகத்தை சேர்ந்த 3 பேர் வாகனத்தில் சென்றபோது, ஆதிவாசி ஒருவர்மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வாகனத்தில் வந்தவர்களை ஆதிவாசிகள் தாக்கினர். அவர்களது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பின்னர் வன்முறை தீவிரமடைந்து சில வீடுகள், அரசு அலுவலகம் தீக்கிரையாகின. தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை போட்டு தீ வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. போலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடந்தது.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். நிலைமையை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க கோக்ரஜார் மாவட்டத்தில் இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன்முறையை அடக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!