புகைபிடிக்கக் கண்டித்த இளம்பெண் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
ரஷ்யாவின் கோஸ்டரோமா ஒப்ளாஸ்ட் பகுதியில், ஓடும் ரயிலில் இருந்து பணிப்பெண் ஒருவரை இளைஞர் கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மார்ச் 30-ஆம் தேதி, செல்யன்பிஷ்க் பகுதியிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று, போனஸ்ய்ரவோ நிலையத்திற்கு முன்பாகச் சிக்னலுக்காகக் காத்திருந்தது. அப்போது ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், வாசலுக்கு அருகே நின்று புகைபிடிக்க முயன்றுள்ளார். இதனை அங்கிருந்த இரினா டமிட்த்டிரிவா என்ற பெண் ஊழியர் (பணிப்பெண்) கண்டித்துள்ளார்.
🚨⚡️During a train stop, a man tried to step out to smoke, but a staff member stopped him. He then pushed her out of the carriage and returned to his seat. pic.twitter.com/SvZbN566t3
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) April 9, 2026
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அந்தப் பெண் கதவு அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தருணத்தைப் பயன்படுத்தி, அவரை ரயிலில் இருந்து வெளியேத் தள்ளியுள்ளார். அந்தப் பெண் கீழே விழும்போது, மற்றொரு தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக அவர் பயணம் செய்த ரயில் அருகிலேயே விழுந்ததால், பெரும் உயிர்ச் சேதமின்றித் தப்பினார்.
இந்த விபத்தில் இடுப்பு எலும்பு மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சக பயணிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், பணிப்பெண்ணைக் கொலை செய்ய முயன்ற அந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்தனர். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
