போதை வீடியோவை தந்தைக்கு அனுப்பியதால் அவமானத்தில் 4வது மாடியிலிருந்து குதித்து பி.டெக் மாணவர் தற்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், கல்லூரி மாணவர் ஒருவர் விடுதி வார்டனின் நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கல்வி நிறுவனங்களில் மாணவர்களைக் கையாளும் முறை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் விடுதி வார்டன் மற்றும் பாதுகாவலர்களின் அநாகரீகமான செயலால் ஒரு இளம் உயிர் பறிபோயுள்ள சம்பவம் நொய்டாவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த உதித் சோனி (20), கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த ஜனவரி 23-ம் தேதி இரவு உதித் சோனி மது அருந்திவிட்டு விடுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த விடுதி வார்டன், அவரை வீடியோ எடுத்து உடனடியாக அவரது தந்தை விஜய் சோனிக்கு அனுப்பியுள்ளார்.

வீடியோவைப் பார்த்த தந்தை, உதித் சோனியைத் தொலைபேசியில் கடுமையாகத் திட்டியதுடன், "படிப்பை நிறுத்திவிட்டு உடனே ஊருக்குத் திரும்பு" என மிரட்டியுள்ளார். உதித் சோனியின் தற்கொலைக்கு வார்டனின் வீடியோ மட்டும் காரணமல்ல எனச் சக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விதிகளை மீறியதாகக் கூறி வார்டன் மற்றும் அங்கிருந்த பவுன்சர்கள் (பாதுகாவலர்கள்) பிவிசி பைப்பால் உதித் சோனியை மிகக் கொடூரமாகத் தாக்கியதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
பலரது முன்னிலையில் தாக்கப்பட்டதாலும், அந்த அவமானம் தந்தைக்குத் தெரிந்ததாலும் ஏற்பட்ட மன உளைச்சலில், உதித் சோனி விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மாணவரின் மரணத்தால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள், விடுதி ஜன்னல்கள் மற்றும் அங்கிருந்த பேருந்தை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் அங்குப் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், விடுதி உரிமையாளர் மற்றும் வார்டன் மீது 'தற்கொலைக்குத் தூண்டுதல்' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் சட்டப்பிரிவுகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
