அந்த மனசு தான் சார் கடவுள்... திடீர் மாரடைப்பு ... சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்!

 
 மாரியப்பன்

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம்  புளியங்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் ஓட்டுநராக புளியங்குடியில் வசித்து வரும்  மாரியப்பன் (48) என்பவர் பணியில் இருந்தார். அப்போது இந்த அரசு பேருந்து நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு வள்ளியூர் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

அரசு பேருந்து

பொத்தையடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மாரியப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்  பேருந்தை சாலையின் ஒரமாக நிறுத்திவிட்டு மயங்கி சரிந்து விழுந்துள்ளார். இதைக் கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாரியப்பனை மீட்டு ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த பிள்ளைகள்! விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரியப்பன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தனக்கு மாரடைப்பு ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என அரசு பேருந்தை சாலையின் நிறுத்தி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web