கச்சத்தீவில் புத்தர் சிலை... வேவு பார்க்கிறதா சீனா... இந்தியா தலையிட கோரிக்கை!

 
கச்சத்தீவு புத்தர்

இந்தியா, இலங்கை இடையே பாக்ஜலசந்தி கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு 1974ல் இந்தியாவின் நட்புப் பரிசாக இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் மீண்டும் கோரிக்கை எழுந்து வருகிறது. 

இந்நிலையில்தான் கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச்சில் இருந்து, 500 மீட்டர் தூரத்தில் மறைப்பு வேலிகள் அமைக்கப் பட்டு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. எதிர்காலத்தில் இந்த இடத்தில் பவுத்த விகார் அமைத்து, யாத்திரைத்தலமாக செயற்படுத்தும் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கச்சத்தீவு புத்தர்

இதுகுறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்பி சார்லஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியதால் இந்த விவ காரம் வெளியே தெரிய வந்தது. இதற்கிடையே, கச்சத்தீவில் புத்தர் சிலை அமைப்பதற்கோ, வேறு சிலைகள் அமைப்பது தொடர்பாகவோ எந்த அனுமதிகளும் பிரதேச செயலகத்தில் பெறப்படவில்லை என்று நெடுந்தீவு பிரதேச செயலர் எவ்.எக்ஸ். சுத்தியசோதி தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு

“கச்சத்தீவை பவுத்த தளமாக மாற்றுவதற்கு இலங்கை முயற்சிப்பதும், சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பதும் சட்டப்படி குற்றமாகும்; மத்திய அரசு தலையிட்டு, கச்சத்தீவை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திய தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web