பிப்ரவரி 1ம் தேதி 9வது பட்ஜெட்... நிர்மலா சீதாராமன் புதிய சாதனை!

 
நிர்மலா சீதாராமன்

மத்திய பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 9-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அவர் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒரே அமைச்சரவையின் கீழ் தொடர்ந்து 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். 2019-ஆம் ஆண்டு முழுநேரப் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், 2024-லும் மீண்டும் அந்த பொறுப்பை ஏற்று தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்திய வரலாற்றில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் மொரார்ஜி தேசாய் முதலிடத்தில் இருந்தாலும், ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9 பட்ஜெட் தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தது நினைவுகூரப்படுகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!