பட்ஜெட் ஹைலைட்ஸ்.. வருமான வரி வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு! பெண்களுக்கு தனி சேமிப்பு திட்டம்!

 
வருமான வரி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில்  இன்று பிப்ரவரி 01ம் தேதி காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பார்லிமெண்டில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 5வது பட்ஜெட்டாகும்.  மோடி தலைமையிலான அரசு பத்தாம் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்றாவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பசுமை எரிசக்தி, பசுமை விவசாயம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத்தொடர்ந்து பேசியவர்...

குடிமக்களுக்கான வாய்ப்புகளை எளிதாக்குகிறது...கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் பத்தாவது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

G20 பிரசிடென்சி உலகப் பொருளாதார ஒழுங்கில் நமது பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது, உலகளாவிய சவால்களில் இந்தியா பிரகாசமான இடத்தை வகிக்கிறது. ஆதார், கோவின் இந்தியாவின் சுய கெளரவத்தை உருவாக்கியது. பரந்த அளவிலான சீர்திருத்தங்களில் அரசு தனி கவனம் செலுத்தியது, செலுத்துகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக 15000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு மேலும் 79000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும், கட்டமைப்பு திட்டங்களுக்கு பத்து லட்சம் கோடி ஒதுக்கப்படும், சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும், மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும், ரெயில்வேத்துறைக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும், மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கான இந்திய கவுன்சில் பொது மற்றும் தனியார் ஆராய்ச்சிக்காகக் முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யப்படும். மீனவர் நலனுக்காக 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

நகர்புற வளர்ச்சி திட்டங்களுக்கு பத்து ஆயிரம் கோடி பழங்குடியினர் மேம்பாட்டுக்கு 15 ஆயிரம் கோடி,தோட்டக்கலை வளர்ச்சிக்கு 2200 கோடி ஒதுக்கப்படும் நாடெங்கிலும் புதியதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும், கழிவுநீரை அகற்ற 100 சதவிகிதம் இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பென்சன் முதியோர் ஓய்வூதியம்

நொடித்துப்போகும் நிலையில் உள்ள சிறு,குறு நிறுவனங்களுக்கு 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற 75 ஆயிரம் கோடி, மாற்று சக்திக்காக நூறு கோடியில் புதிய திட்டம்,  பசுமை எரிசக்தி  திட்டத்திற்காக  35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும், ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்யப்படுத்தப்படுவர். லாடாக்கில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல 27 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்,  இளைஞர்களை திறன் மேம்பாட்டிற்காக இந்தியா முழுவதும் 30 மையங்கள் அமைக்கப்படும் மூன்று ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும், நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் , சேமிப்பு கிடங்குகள் நாடெங்கிலும் உருவாக்கப்படும்.

7.5 சதவிகித வட்டியில் பெண்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் உருவாக்கம், முதியோர் டெபாசிட் தொகை அஞ்சலகத்தில் ரூபாய் 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்வு. ஆன்லைன் பரிவர்த்தனை  தொகை 4.5 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக அதிகரிப்பு KYC நடைமுறை எளிதாக்கப்படும் சில பொருட்களுக்கு அடிப்படை இறக்குமதிவரி 23 சதவிகிதத்தில் இருந்து 11 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, வைரம், ரப்பர், ஆடைகள் மற்றும் சிகரெட்டுக்களுக்கான இறக்குமதி வரி உயர்வு. ஆண்டுக்கு 7 லட்சம் வரை தனிநபர் வருமானத்திற்கு வரிவிதிப்பு கிடையாது. பதிய வருமான வரி உச்ச வரம்பில் உள்ளோருக்கு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிப்பு. புதிய வருமான வரம்பில் உள்ளவர்களுக்கு 7 லட்சமாக அதிகரிப்பு.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web