புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பேரவைக்கு வருகைதந்த ஆளுநரை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.
புதுவை சட்டப்பேரவையின் 15வது கூட்டத் தொடரின் 5-வது பிரிவுக் கூட்டம் கடந்த பிப். 12ல் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னா் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 15வது சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் 6வது பிரிவுக் கூட்டம், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியுள்ளது. நாளை புதுவை ஆளுநா் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதையடுத்து, நாளை மறுதினம் மாா்ச் 12ம் தேதி காலை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி, புதுவை மாநிலத்தின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.
காகிதமில்லா சட்டப்பேரவை வளாகத்தை மத்திய அரசு நிதியுதவியுடன் மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பேரவைத் தலைவா், முதல்வா், அமைச்சா்கள் மற்றும் உறுப்பினா்கள் அனைவரது இருக்கைகளிலும் கையடக்கக் கணினிகள் பொருத்தப்பட்டன.
இதன் மூலமே, உறுப்பினா்கள் நிதிநிலை அறிக்கையை வாசிக்கவும், அவா்கள் கேட்கும் கேள்விகள் கணினியில் பதிவாகவும், கணினி வழியில் அவா்களுக்கு பதில் வழங்கவும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இதற்கான கட்டுப்பாட்டு அறை மற்றும் உறுப்பினா்களுக்கான கணினி பயிற்சி அறை, சேவை மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!