பட்ஜெட் மாணவர்கள் ஸ்பெஷல் : பள்ளிகளில் செஸ், புதிய கல்லூரிகள் உட்பட அம்சங்கள் ... ஒரு பார்வை!

தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ஆளும் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாக கருதப்படுகிறது. இதில் மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு பிரிவுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாணவர்களுக்கான பட்ஜெட்டில், மும்மொழி கொள்கை விவகாரம், திறன்மிகு வகுப்பறைகள், தொழில்நுட்ப ஆய்வகங்கள், சதுரங்க திட்டம் என மாணவர்கள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி,
மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத காரணத்தால் மத்திய அரசு ரூ.2150 கோடியை வழங்கவில்லை. இந்த தொகையை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து நிதியை விடுவித்துள்ளது.
ரூ.65 கோடி மதிப்பீட்டில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் தரம் உயர்த்தப்படும்.
பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உட்பட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள்
அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும்.
பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.600 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!