பிப்.17ல் சட்டப்பேரவை… அதே நாளில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

சட்டப்பேரவை கூடும் அன்றே 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வரவு செலவுகள் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட் மூலம் அரசு நிர்வாக பணிகள் தடையின்றி நடைபெற தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும். தேர்தல் காலம் வரை அரசின் செயல்பாடுகள் தொடர இது உதவும். அதனால் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
