#BUDGET2026: எவை எல்லாம் சாதகமான அம்சங்கள்... முழுமையான அலசல்!

 
பட்ஜெட்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட வரி சீர்திருத்தங்களே இந்த ஆண்டும் தொடர்கின்றன. இருப்பினும், வரி செலுத்துவோரின் சுமையைக் குறைக்கவும், நடைமுறைகளை எளிதாக்கவும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

தனிநபர் வருமான வரி: தற்போதைய நிலவரம்

புதிய வரி முறையின் (New Tax Regime) கீழ் வரி வரம்புகள் கடந்த ஆண்டைப் போலவே மாற்றமின்றி உள்ளன. எனினும், ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 87A பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறுவதால் வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி வரம்பில் மாற்றம் இல்லாவிட்டாலும், பிற துறைகளில் சில முக்கிய வரிச் சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிர்மலா பட்ஜெட்

தற்போதைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, எளிமைப்படுத்தப்பட்ட 'புதிய வருமான வரிச் சட்டம் 2025' வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். வருமான வரி கணக்கைத் திருத்தித் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வோருக்கான வரி (TCS) 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவோருக்கான வரியும் 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வரி கணக்குத் தாக்கல் செய்வதில் ஏற்படும் சிறிய தவறுகளுக்கு இனி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. மோட்டார் வாகன விபத்துகளுக்காக நீதிமன்றங்களால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பங்குகளைத் திரும்பப் பெறும்போது, முதலீட்டாளர்களுக்கு அது இனி மூலதன ஆதாயமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட்

இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு  முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை (Fiscal Deficit) 4.3 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

"விக்சித் பாரத் 2047" என்ற இலக்கை நோக்கி நாட்டை நகர்த்தும் வகையில், இந்த பட்ஜெட் 'மூன்று கடமைகள்' என்ற கொள்கையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!