தவெக பொதுக்கூட்டத்தில் க்யூஆர் கோடுடன் எருமை மாடுகள்...!
புதுச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. க்யூஆர் கோடு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஒரு தவெக தொண்டர் எருமை மாடுகளை கூட்டத்துக்கு அழைத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், நுழைவாயிலில் தவெக தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் குழப்பமான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சவாலுக்குள்ளானதாக கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
