விரைவில் சென்னை–ஹைதராபாத் புல்லட் ரயில்... 12 மணி பயணம் இப்போது வெறும் 2 மணி 20 நிமிடத்தில்!
உலக நாடுகளில் அதிவேக புல்லட் ரயில் சேவை ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே பரவலாக உள்ளது. இந்தியாவிலும் மும்பை–அகமதாபாத் இடையில் புல்லட் ரயில் பாதை தீவிரமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில், தென்மாநிலங்களிலும் புல்லட் ரயில் சேவை அமைய இரண்டு முக்கிய வழித்தடங்கள் ஆய்வில் உள்ளன. சென்னை–பெங்களூரு–மைசூரு பாதையில் நில அளவீடு நடைபெறுகின்றது. அதே நேரத்தில், சென்னை–ஹைதராபாத் இடையேயான 778 கிமீ புல்லட் ரயில் திட்டத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட வழித்தட அறிக்கையை தென் மத்திய ரயில்வே, தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

சென்னையிலிருந்து கூடூர் வழியாகச் செல்லும் முதற்கட்ட வரைபடம் இருந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கைக்கு இணங்க திருப்பதி வழித்தடமும் சேர்க்கப்பட்டுள்ளது. ரிட்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, தமிழக எல்லைக்குள் புல்லட் ரயில் பாதைக்காக 223.44 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதை மொத்தத்தில் 65 சாலைகளையும், 21 உயர் மின்னழுத்த மின் பாதைகளையும் கடக்கும் என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமாக, சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் அருகே உள்ள வெளிவட்டச் சாலையில் தலா 50 ஏக்கரில் இரண்டு புல்லட் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்துவிட்டால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரும். தற்போது சென்னை–ஹைதராபாத் பயணம் ரயிலில் சுமார் 12 மணி நேரம் எடுக்கும் நிலையில், புல்லட் ரயில் சேவை தொடங்கினால் இந்த தூரத்தை வெறும் 2 மணி 20 நிமிடங்களில் முடித்து விடலாம். தென்னிந்தியாவில் அதிவேக ரயில் காலத்தை ஆரம்பிக்கும் திட்டமாக இது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
