வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்... திமிறிய காளைகளை அடக்கிய இளைஞர்கள்!

இன்று காலை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக வாடிவாசல் முன்பு நின்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 6.30 மணிக்கே தொடங்கியது. அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்ததும், வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், வாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு இளைஞர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டினர்.
சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசும், மாடுபிடி வீரர்களை துவம்சம் செய்து யாருக்கும் அடங்காத காளையாக அடக்கமுடியாத காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் வழங்கப்படுகிறது. இதற்காக கார், டிராக்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,026 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
மாடுபிடி வீரர்களுக்கு மஞ்சள், இளஞ்சிவப்பு, நீல நிறம் என டி-சர்ட் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு சுற்றுக்கும் மாடுபிடி வீரர்கள் 50 பேர் களமிறங்கினர். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றில் பங்கேற்று அதில் அதிக காளைகளை அடக்குவோருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.
இதில் தங்கக்காசுகள் வெள்ளிக்காசுகள், வயர் கட்டில், அண்டாக்கள், சைக்கிள்கள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!