அலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளைகள்... நேரில் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் - வெற்றி பெற்றவர்களுக்குத் தங்கம் பரிசளிப்பு!

 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து காளைகளின் வீரத்தையும், காளையர்களின் தீரத்தையும் கண்டு ரசித்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையின் முக்கிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் போட்டியை நேரில் பார்வையிட்டார்.

ஜல்லிக்கட்டு மூர்த்தி அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் அமர்ந்தவாறு, வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளையும், அவற்றுடன் மோதும் வீரர்களையும் அவர் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தார்.

ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற காளை ஒன்றின் உரிமையாளரான ராஜேஷ் என்பவருக்கு, முதலமைச்சர் தனது கையாலேயே தங்க மோதிரத்தை அணிவித்து கௌரவித்தார். இது அங்குள்ள காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு

போட்டியில் பங்கேற்கப் பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான காளைகளில், ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த காளைகள் களமிறக்கப்பட்டு வருகின்றன. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து மைதானத்தை விட்டு வெளியேறுகின்றன. அதே சமயம், பல மாடுபிடி வீரர்கள் காளைகளின் திமிலை உறுதியாகப் பிடித்து அடக்கி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!