மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்... மாடு முட்டியதில் பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு!

 
மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டிகளில், காளைகள் முட்டியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமங்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டுப் போட்டிகள் கலைகட்டி வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற போட்டிகளில் நேர்ந்த எதிர்பாராத விபத்துகள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

மஞ்சுவிரட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தில் மஞ்சுவிரட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்குள் சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று, அங்கிருந்த வினிதா (30) என்ற பெண்ணை பலமாக முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல் செந்தாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியின் போது, காளை முட்டியதில் சக்திவேல் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரு உயிரிழப்புகள் குறித்தும் தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!