அவனியாபுரம், பாலமேடு, சூரியூர் ஜல்லிக்கட்டு - களமாடிய காளைகளும், கார் வென்ற காளையர்களும்.. நேரில் கண்டுகளித்த திரை நட்சத்திரங்கள்!
மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 15ம் தேதி நடைபெற்றது. இதில், வீரர்கள் மற்றும் காளைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 939 காளைகள் களமிறங்கின; 564 வீரர்கள் பங்கேற்றனர். 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்து 'கார்' பரிசை வென்றார். அவனியாபுரம் விருமாண்டி சகோதரர்களின் மந்தை முத்துகருப்பன் மாடு சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டு 'டிராக்டர்' பரிசைப் பெற்றது.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு (ஜனவரி 16)
நேற்று மாட்டுப் பொங்கல் அன்று உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு மஞ்சள் மலை சுவாமி ஆற்றுத் திடலில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடங்கி வைத்தார். 861 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 465 வீரர்கள் களம் கண்டனர்.
17 காளைகளை அடக்கிய அஜித் (வாடகை கார் ஓட்டுநர்) முதலிடம் பிடித்துச் சொகுசு கார் பரிசை வென்றார். "வாடகை கார் ஓட்டிய நான் இனி கார் உரிமையாளர்" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குலமங்கலம் வக்கீல் திருப்பதியின் காளை முதலிடம் பிடித்து 'டிராக்டர்' பரிசை வென்றது.

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு (ஜனவரி 16)
புதிதாக ரூ.3 கோடியில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் இந்தப் போட்டி கோலாகலமாக நடந்தது. 12 காளைகளை அடக்கிய பெரியசூரியூர் மூர்த்தி கார் பரிசை வென்றார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 'கொம்பன்' காளை இப்போட்டியில் சிறப்பிடம் பிடித்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கத் திரைத்துறையினரும் அதிக ஆர்வம் காட்டினர். நடிகர் சூரி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெண்கலக் காளைச் சிலையை வழங்கினார். "ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க ஆசை வந்துள்ளது" என நடிகர் ஜீவா தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். நடிகர் அருண் பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் தங்களது குடும்பத்துடன் வந்து போட்டியை ரசித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
