மூட்டை மூட்டையாகச் சிக்கிய ரூ500 நோட்டுக்கள்... பிடி இறுகியதால் நீதிபதி அதிரடி ராஜினாமா!

 
அலகாபாத் அலகாபாத்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நள்ளிரவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்து, இந்திய நீதித்துறையையே அதிர வைக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடியபோது, வீட்டின் ஒரு ரகசிய அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாகக் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் காட்டுத்தீ போலப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் உடனடியாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அவர் மீது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிரடியாக நோட்டீஸ் அளித்தனர். இதனை ஏற்ற சபாநாயகர், நீதிபதியின் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க உயர்மட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழுவின் விசாரணையைத் தடுத்து நிறுத்தக் கோரி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட போதிலும், நீதிபதிகள் விசாரணையைத் தொடரப் பச்சைக்கொடி காட்டியதால் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

விசாரணைக் குழுவின் பிடி மெல்ல மெல்ல இறுகிய நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள அவர், மிகுந்த மனவேதனையுடன் இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். அவர் தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளதால், ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் அவருக்குக் கிடைப்பதில் சட்டச் சிக்கல்கள் இருக்காது என்று கூறப்படுவது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்